உலக மக்கள் தொகை தின நாள் 11.07.2018ஐ அனுசரிக்கும் பொருட்டு 20.07.2018 அன்று மாலை 3.00 மணியளவில் மாண்புமிகு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் தலைமையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் வெளிப்பகுதியில் இருந்து பொது மக்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொள்ளவிருக்கும் பேரணி மற்றும் மாலை 4.00 மணியளவில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகை கலையரங்கில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் தலைமையில் கருத்தரங்கும் நடைபெற உள்ளது

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து இரண்டாம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்ட 5589 வாகனங்களின் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணாபுரம் எரிவாயு மயான பூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் அருகில் உள்ள கண்ணன் காலனி மயானபூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

காசநோயாளிகள் ஊட்டச்சத்து உதவித்தொகையினை பெற வங்கிக் கணக்கு எண் விவரங்களை காசநோய் பணியாளர்களிடம் தெரிவிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பாலவாக்கம் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சிறப்பு தூய்மை பணி முகாம் இன்று நடைபெற்றது

சென்னை சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் ரூ.5 கோடியே 21 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட தியாகராயர் நகரில் உள்ள டாக்டர் நடேசன் பூங்கா மற்றும்
ஜீவா பூங்கா ஆகியவற்றை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் மற்றும் மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்களும் இன்று திறந்து வைத்தார்கள்.

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்களை 03.11.2018க்குள் சமர்ப்பிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சொத்துவரி சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் மூலம் தீர்வு காண தேசிய மக்கள் அதாலத் நடைபெற உள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வர்தா புயலால் சேதமடைந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் ரூ.5.29 கோடி செலவில் 23,000 புதிய மரங்கள் நடும் பணி துவங்கப்படவுள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர்
தா. கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஸ்வச்சதா பக்வாடா தூய்மை பணி இன்று நடைபெற்றது

சென்னை மாவட்டத்திற்குட்ட 16 சட்ட மன்ற தொகுதிகளிலும் 10.01.2018 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு நகர்புறங்களில் 1400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளின் பிரிக்கும் பணி முடிவுற்று வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் 02.07.2018 அன்று வெளியிடப்படவுள்ளது. வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் குறித்து பொது மக்கள் தங்கள் ஆலோசனைகளை 02.07.2018 முதல் 09.07.2018 வரை தெரிவிக்காலம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தண்டையார்பேட்டை, தொற்றுநோய் மருத்துவமனையில் 2018-19ஆம் ஆண்டிற்கான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா.கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கல்விச் சுற்றுலாவாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள சென்னைப் பள்ளி மாணவ/மாணவியர்கள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு இலட்சம் ஸ்டிக்கர்கள் மூலம் கை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் தியாகராய நகரில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அரும்பாக்கம் இந்து மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் வேலங்காடு மற்றும் நுங்கம்பாக்கம் இந்து மயானபூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சொத்து உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் சொத்துவரி கேட்பு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 302 வாகனங்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி “தி டிரான்ஸ்பர்மேட்டிவ் அர்பன் மொபிலிட்டி இனிஷியேட்டிவ்” (The Transformative Urban Mobility Initiative) என்ற விருதை பெற்றுள்ளது.

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் 2017-18ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற சென்னைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான ஊக்கத்தொகையினை இன்று வழங்கினார்.

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் ரூ.2 கோடியே 6 இலட்சம் மதிப்பீட்டிலான பருத்திப்பட்டு பூங்காவினை இன்று திறந்து வைத்தார்.

அம்பத்தூர் ஏரியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு தூய்மைபடுத்தும் பணி முகாம்

திரு.வி.க.நகர் (தாங்கல்) மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், G.K.M. காலனி மயானம் மற்றும் M.P.M. தெரு மயானபூமியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு